மலர்களின் மருத்துவ குணங்கள்-flowers health benefits

 


மலர்களின் மணம். மனதிற்கு இதமளிப்பது மட்டுமின்றி, உடல் நலத்திற்கும் நன்மை பயக்கக் கூடியது என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் எல்லோருமே ஒப்புக் கொண்டிருக் கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் மலர் களின் பங்கு பழைய காலம் முதலே அதிகமாக இருந்து வருகிறது. மருந்தாக பயன்படும். சில மலர்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


அகத்திப் பூ :- அகத்திப் பூவை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டு களாக நறுக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சோத்து தினமும் சாப் பிட்டு வர. 6 முதல் 7 நாட்களிலேயே உடல்சூடு, பித்தசூடு போன்றவை தீர்ந்து விடும்.

ஆவாரம் பூ :- ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும். ஆவாரம் பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம்எடுத்து நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை சேர்த்து காப்பி போல பருகி வர, உடல்சூடு, நீரிழிவு, நீர்க் கடுப்பு போன்ற நோய் தீரும்.மேலும் ஆவாரம் பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி உடலில் தேய்த்து குளித்துவர,கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.

இலுப்பைப் பூ: இலுப்பைப் பூவை பசும்பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் இது தாகத்தை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது.

நெல்லிப் பூ :- உடல் குளிர்ச்சியை உண்டாக்கும். நெல்லிப் பூவுடன் விழுதி இலை. வாத நாராயண இலை சேர்த்து கஷாயம் வைத்து- இரவில் சாப்பிட, காலையில் சுகபேதியுண்டாகும். பேதிக்கு சாப்பிடவும். மலச்சிக்கல் நீங்கவும், நெல்லிப்பூ சிறந்த மருந்தாகும்.

செம்பருத்திப் பூ :- இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் கஷ்டப்படுப வர்கள். இந்தப் பூவை தண்ணீரில் போட்டு, நன்றாக சுண்டக் காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

வேப்பம் பூ :- சிறந்த கிருமி நாசினி ஆகும். இந்த பூ வீட்டில் இருந்தால் சின்னஞ் சிறிய கிருமிகள ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

முருங்கைப் பூ : ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாதுக்களை பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமிகளை ஓழிக்கவும் கூடியது. கண் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு நல்லது.

ரோஜாப் பூ :- இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக் கூடியது. பாலில் இதழ்களை தூவி குடித்து வந்தால். நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யக் கூடியது.

மல்லிகைப் பூ : கண் பார்வைகூர்மையாக்கும் சக்தி இந்த மலருக்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உடையது. கிருமி நாசினியாக வும் செயல்படுகிறது.

மகிழம் பூ :- மகிழம் பூவின் மணத்தினால் கண் நோய், தலைவலி, தலைபாரம் போன்ற நோய்கள் நீங்கி விடும்.

ஜாதிப் பூ இந்தப்பூவை கண்களில் ஒற்றிவர கண்வலி குண மாகும். உடலுக்கு குளிர்ச்சியை உண் டாக்கக் கூடியது.

தாழம் பூ : இந்தப் பூவை தலையில் சூடிக்' கொண்டால் பேன் மற்றும் வேறு எந்த கிருமிகளும் நெருங்காது. இது தவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

கருஞ் செம்பைப் பூ : இந்த பூவையும். நல்லெண்ணையையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தைக் கண்டிக்கும். தலைபாரம். தலைவலி, கழுத்து நரம்பு வலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப் பூ கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை தாம்பூலத்துடன் அல்லது இரவு உறங்கச் செல்லும்போது பசும் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்துவர, சீதள சம்பந்தமான விணிகள் அணுகாமல் காக்கும். இது தவிர பிறக்கின்ற குழந்தை நல்ல சிவந்த நிறத்து டனும் திடகாத்திரமாக இருக்கவும் உபயோகப் படுகிறது.


Comments

Popular posts from this blog

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit