சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்-best fruits for diabetics


best fruits for diabetics


 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

 சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவே உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் பொதுவாக குறைவான கார்போஹைட்ரேட் அதிகமாக நார்சத்து தேவையான அளவு புரதம் வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும் 

முக்கியமாக இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் அந்த வகையில் பழங்களை பொறுத்தவரையில் சில பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தீடீரென உயர்த்தி விடும் ஆனால் சில பழங்களை பயமில்லாமல் சாப்பிடலாம்

 இன்னும் சொல்லப்போனால் இந்த பலன்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை தரக் கூடியதும் கூட முக்கியமாக இவைகள் குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்ட தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுமஅது என்னென்ன பழங்கள் என்று இப்பொழுது பார்ப்போம் 

 ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் கரை அளவையும் சீராக வைக்க முடியும்

 எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டு வருவது நல்லது முக்கியமாக கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டில் தயார் செய்து சாப்பிடுவது நல்லது அதாவது இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது 

இன்னும் சொல்லப்போனால் இதன் முழுமையான நார் சத்துகளையும் ஆக்சன் நன்மைகளைப் பெறுவதற்கு ஆரஞ்சு பழத்தை உரித்து சுளைகளை அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது 

கொய்யாப்பழம் கொய்யாவில் நிறைந்துள்ள நார் சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாகவும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணிகள் இருக்கின்றனமுக்கியமாக இதன் குறைந்த கிளைசெமிக் உழைப்பின் காரணமாக சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது மேலும் அதிக அளவில் நார்சத்து கொண்டுள்ளதால் சர்க்கரை அளவு நன்கு ஒழுங்கு படுத்த படுகிறது எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொய்யாபழம் சிறந்த உணவாக இருக்கும் அதுமட்டுமல்ல சர்க்கரை நோயின் பக்க விளைவுகளையும் தடுக்கிறது முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது இதய நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது கண் பார்வையை அதிகப்படுத்தும் மன அழுத்தத்தை குறைக்கிறது மலச்சிக்கலைப் போக்குகிறது இப்படி இதன் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம் 

நாவல் பழம் கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கக்கூடியது மேலும் கல்லீரல் கோளாறுகள் குடற்புண் இவற்றைப் போக்கும் இதயத்தை சீராக இயங்கச் செய்யும் ரத்த சோகையை போக்கும் மேலும் இதில் அதிக அளவு கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும் இதனால் நம் எலும்புகள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும் அதே போன்று இதன் விதைகளை இடித்து தூளாக்கி தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும் மாலையிலும் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்

 ஆப்பிள் பொதுவாக தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள் முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் விட்டமின் கள் தாதுக்கள் ஆக்சிஜனேற்றி கள் மற்றும் நார் சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துக்கள் இவற்றில் உள்ளன பொதுவாக நார்சத்து அதிகமுள்ள உணவுகள் சர்க்கரை யை உருவாக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனஅதேபோன்று இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு இதய நோய்களை வராமல் தடுக்கிறது மேலும் இது செரிமான மண்டலத்தையும் வலிமைப்படுத்தும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

 எலுமிச்சை எலுமிச்சையில் விட்டமின் சி நார்ச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வளமாக உள்ளது உடலில் தேவையான அளவு விட்டமின் சி இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயம் குறைவு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள் ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான விட்டமின் சி அளவில் பாதியை ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து விடும் உண்மையில் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல சர்க்கரை நோயை தடுக்க நினைப்பவர்களும் மிக சிறந்தது என்கிறது அமெரிக்கா எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வருவது நல்லது

 நெல்லிக்கணி இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பாரம்பரிய சிகிச்சை முறையாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவது நல்லது இதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும் முக்கியமாக நெல்லிக்கனியில் உள்ள குரோமியம் கணையத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது அதே போன்று இதில் தேன் கலந்து குடிக்கும் போது இரத்தமானது சுத்தமாகும் இதனால் உடல் சுறுசுறுப்போடு ஆரோக்கியமாகவும் இருக்கும்

சாத்துக்குடி இதுவும் சர்க்கரை நோயாளிகள் பயம் இல்லாமல் சாப்பிட வேண்டிய பழம் ஆகும் மேலும் இது உடலின் நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது அதிலும் இதில் கலோரிகள் மிகவும் குறைவுமுக்கியமாக சூழ்நிலையில் வலிமையான நோயெதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமாகும் அந்த வகையில் தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதே போன்று இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய் அபாயத்தை குறைக்கும் குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்குவதை தடுத்து பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதையும் தடுக்கும்

 எனவே இங்கே பார்த்து இந்த ஏழு பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய டைட்டில் இருக்குமாறு பார்த்துக்கொண்டாலே ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை முக்கியமாக இந்த ஏழு பழங்களும் சர்க்கரை நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் முக்கியமாக இவற்றை ஜூஸ் செய்து சாப்பிடும் பொழுது பால் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது

Comments

Popular posts from this blog

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit